தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் அகிலன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் அர்த்தனாரி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். மேட்டூர் தாலுகாவை பிரித்து மேச்சேரி தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்க வேண்டும். பதிவறை எழுத்தர்களுக்கு, இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.