சங்கராபுரம் அரசு பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவங்கியது. சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மெல்ல கற்கும் மாணவர்கள், மேலும் சிறப்பாக படிப்பதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு புத்தாக்க பயிற்சி துவங்கியது. இப்பயிற்சியில் சங்கராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்கள் 400 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.அதன் துவக்கமாக, தமிழ் பாடத்திற்கு 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில், மாணவர்களுக்கு அனைத்து வியாபார சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு மெட்ரிக் மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் ரமேஷ், வெங்கடேசன், கருத்தாளர்கள் மகேஸ்வரி, ஜாகிர் உசேன், செல்வம், பொன்னுசாமி ஆகியோர் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கினர். பள்ளியின் உதவி தலைமையாசிரியர் மதியழகன், அன்புக்கரசி நன்றி கூறினர்.