கரடிகுளத்தில் இலவச பொதுமருத்துவ முகாம்!

கரடிகுளத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-12-28 04:02 GMT
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம், சார்பில் கரடிகுளம் சேவை மையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கரடிகுளம் பஞ்.தலைவர் சுந்தரி தங்கவேல் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொது மருத்துவர் சரவணவிஜய் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல் தலைவலி காது மூக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலமாக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெட்காட் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் விஜயன், பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் முத்துமாலை, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கோவில்பட்டி வட்டார பயிற்றுநர் முருகலட்சுமி,செவிலியர்கள் இசக்கிபவதாரணி, ஸ்ரீதேவி, கமலாதேவி, பெல்ஸ்டார் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் ராஜ், பாண்டவர்மங்கலம் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News