மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை!

தூத்துக்குடியில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனவேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-12-28 04:05 GMT
தூத்துக்குடியில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனவேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (46). மீனவர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி திட்டினாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியராஜ் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News