பேரூராட்சியில் சான்றிதழ் வழங்கும் முகாம்

முகாம்

Update: 2024-12-28 04:13 GMT
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரகண்டநல்லூர் பகுதியில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.பெஞ்சல் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. துணை ஆட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சுசிலா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் அன்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வருவாய்த்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கதீஜா பிவி, செயல் அலுவலர் முரளி, கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, ரவி, குமார், சேட்டு, முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News