திருவேங்கடம் அருகே விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Update: 2024-12-28 04:13 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் அருகில் உள்ள கரிசல்குளம் கிராமத்தில் தேமுதிக கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலையில் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு தேமுதிக கட்சி கிளைத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கட்சி கிளைச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் கருப்பசாமி, இளைஞரணி செயலாளரும் முத்துராஜ், கிளை பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன், ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News