மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்முரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், மணலூர்பேட்டை பேரூராட்சி செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முருகன், தெய்வசிகாமணி, சரவணன், சுப்பிரமணியன், முனியன், ஊராட்சி தலைவர் சிலம்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.