மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உளுந்தூர்பேட்டை தாலுகா, சின்னமாரனோடை பகுதியைச் சேர்ந்தவர் யாக்கோப் மகன் ஆகாஷ்பிரேம், 24; இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரனோடை அருகே நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற பாரத் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.