அஹோபில மடத்திற்கு ரங்கநாத யதீந்திர சுவாமி வருகை

வருகை

Update: 2024-12-28 04:28 GMT
பாதுார் அஹோபில மடத்திற்கு ஜீயர் அழகியசிங்கர் 46ஆவது பட்டம் சடகோப ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள் வருகை தந்துள்ளார். உளுந்துார்பேட்டை வட்டம் பாதுார் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அஹோபில மடத்திற்கு அஹோபில மடம் ஜீயர் அழகிய சிங்கர் 6 ஆவது பட்டம் சடகோப ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள் வருகை புரிந்துள்ளார்.தனுர் மாத பூஜையின்போது அகோபில மடத்தின் அனைத்து பகுதியில் உள்ள மடங்களுக்கு விஜயம் செய்யும், சடகோப ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள், அங்கு நடக்கும் பூஜைகளை இணைந்து செய்வது வழக்கம். அதன்படி பாதுார் கிராமத்தில் உள்ள அஹோபில மடத்தில் தங்கி, அங்கு தினசரி நடக்கும் நரசிம்மர் பூஜைகளில் பங்கேற்கிறார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்று செல்கின்றனர்.

Similar News