கோவை: வீட்டுமனை நில விநியோக பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

பூமிதான திட்டத்தின் கீழ் செம்மேடு மற்றும் ஓடந்துறை பகுதியில் உள்ள பயனாளர்களுக்கு வீட்டுமனை நில வினியோக பத்திரங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-12-28 04:32 GMT
கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூமிதான திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக செம்மேடு மற்றும் ஓடந்துறை பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை நில விநியோக பத்திரங்களை நேற்று வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏறத்தாழ 30 ஆண்டு காலங்களாக நில விநியோக பத்திரங்கள் கிடைக்குமா கிடைக்காதா என்ற நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் உங்களுக்கு நான் இருக்கிறேன் என தமிழக முதலமைச்சர் 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்திருக்கிறார் என தெரிவித்தார்.இந்த மூன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேல் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் விடியல் பயணம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் போன்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, 257 பேருக்கு தற்பொழுது பட்டா வழங்கப்படுவதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மட்டும் 1554 ஏக்கர் பூமிதான நிலம் இருப்பதாகவும் அதில் தற்பொழுது வரை 117 ஏக்கர் நிலங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Similar News