ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி உடல் மாரியம்மன் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 12வது ஆண்டு மண்டல பூஜை விழா கணபதி யாகத்துடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு சொர்ணாபிஷேகம், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஐயப்ப சுவாமியை கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்தனர். பொதுமக்கள் ஐயப்ப சுவாமிக்கான பஜனை பாடல்களை பாடினர். 18 படி விளக்கேற்றப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.