உசிலம்பட்டி அருகே வாலிபர் மாயம்.
மதுரை உசிலம்பட்டி அருகே வாலிபர் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கீழத் தெருவில் வசிக்கும் மாசாணம் மகன் முத்து இருளா பாபு ( 22) என்பவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை நேற்று மதியம் உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.