அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையில் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக முதல்வரின் மெளனத்தை கலைந்திட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள், கருவூலகங்கள் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றகோரியும், தமிழக முதல்வரின் மௌனத்தை கலைந்திடவும் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு 4 கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற தீர்மானத்தில் முதல் கட்டமாக இன்று நிலக்கோட்டை தாலுகாவில் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.