கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

வத்தலகுண்டுவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

Update: 2024-12-28 04:54 GMT
திண்டுக்கல், வத்தலகுண்டு, பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம்,1 செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது அதேபோல் 3 கடைகளில் திருட முயற்சி சம்பவம் நடைபெற்றது. இதைதொடர்ந்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்புஆய்வாளர் ஜாபர் காவலர்கள் சுரேஷ்பாண்டி, பார்த்திபன், முத்துரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்த ரித்தீஷ்குமார்(26) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரித்தீஷ்குமார் மீது தேனி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News