ராணிப்பேட்டையில் வடமாநில தொழிலாளி திடீர் சாவு
வட மாநிலத் தொழிலாளி திடீர் பலி-போலீஸ் விசாரணை!
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அசுடோஸ்ஜா (வயது 42). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சாப்பிட்டபின் உடல்நிலை சரியில்லாமல் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விடுதிக்கு சென்று தூங்கினார். வெகுநேரம் ஆகியும் அவர் எழவில்லை. இந்த நிலையில் உடன் தங்கியிருந்தவர்கள் அசுடோஸ்ஜாவை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அங்கு சென்று இறந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.