அரக்கோணம் மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!

குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை-நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Update: 2024-12-28 05:39 GMT
அரக்கோணம் நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை வண்டிகள் மூலம் பெற்று வருகின்றனர். இதனிடையே நகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பொது மக்களுக்கு பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் திருமலை தெரு, சாவடி தெரு, பஜார் பகுதி சுவால்பேட்டை, பழனிபேட்டை, ஜோதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் காந்திரோடு பகுதியில் குப்பை கொட்டிய நபர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார். இதனை அடுத்து நகராட்சி ஆணையாளர் நிருபர்களிடம் கூறு கையில், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதனை கட்டத் தவறினால் கடைகளுக்கு சீல் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News