பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்து

பென்னாகரம் அருகே வெள்ளரிப்பிஞ்சு ஏற்றி வந்த லாரி வாரம் தாங்காமல் குப்புற கவிழ்ந்து விபத்து

Update: 2024-12-28 05:49 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் வத்தலாபுரம்,சிகரஹள்ளி. சிலப்பநல்லூர் போன்ற பகுதிகளில் இருந்து இன்று டிசம்பர் 28, வெள்ளரிப்பிஞ்சு ஏற்றி வந்த லாரி குள்ளாத்தரம் பட்டி அடுத்த குளத்தங்கரை என்ற இடத்தில் மிகப் பெரிய வளைவு உள்ளது அந்த வளைவில் நிலைத்தடுமாறி வாகனம் விபத்துக்கு உள்ளானது. அந்த வளைவில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. அதேபோல் உயிர் சேதமும் நடந்துள்ளது. நிறைய பேர் வளைவில் விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் குறுகிய வளைவு. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று அடிக்கடி அங்க விபத்து நடக்கும் போது பொதுமக்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.

Similar News