அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம்.

மதுரை மதனகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-12-28 05:52 GMT
மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஶ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு குரோதி வருடம் மார்கழி மாதம் 15ம் தேதி (30.12.2024) திங்கட்கிழமை மூல நட்சத்திரமும் அமாவாசை திதியும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயர் சந்திதியில் காலை 9 மணிக்கு விஷேச ஹோமம் அலங்கார திருமஞ்சனம் விசேஷ ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் மாலை 6 மணிக்கு 10008 வடமாலையினால் அலங்காரம் ஆராதனை 1008 ஹனுமத் நாமாவளி அர்ச்சனை மற்றும் பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News