ஈரோடு, பழைய பாளையம், அன்னைசத்யா நகரை சேர்ந்தவர் கோபால் (65). தனது மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக அவல்பூந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு நாடார் மேடு பகுதி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஜே.சி.பி வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் கோபால் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.