வேளாண் அதிகாரிகள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடுபொருட்கள் இருப்பில் உள்ளன வேளாண் அதிகாரிகள் தகவல்
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 733.44 மி.மீட்டர் ஆகும். நடப்பாண்டு கடந்த 24ஆம் தேதி வரை 714.14 மி.மீ மழைப்பதிவாகியுள்ளது.நடப்பாண்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதை 14.1 டன், சிறுதானியங்கள் 8.4 டன், பயிறு வகைகள் 21.8 டன், எண்ணெய் வித்துக்கள் 75.1 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 6,215 டன், டி.ஏ.பி. 4,813 டன், பொட்டாஷ் 3,381 டன், காம்ப்ளக்ஸ் 9,336 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடுப்பொருட்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளின் தேவைக்காக இடுபொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு பூச்சி மருந்துகள் ரசாயன உரங்களும் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் எண் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி தொடர்ந்து பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது எனவே இந்த திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.