கோவை: பாஜக தொண்டர் சாட்டை அடி போராட்டம் !

கோவை அரசூர் ஊத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாஜக தொண்டரான முருகேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று கூறி அவரது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் மேற்கொண்டுடார்.

Update: 2024-12-28 06:54 GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு போராட்டம் மேற்கொண்டார்.இந்நிலையில் கோவை அரசூர் ஊத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாஜக தொண்டரான முருகேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று கூறி அவரது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் மேற்கொண்டுடார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எட்டு முறை சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் இவர் பத்து முறை சாட்டையால் அடித்துக் கொண்டார்.

Similar News