திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சுத்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகராட்சி பாதாள சாக்கடை உடைந்து சாலையில் சேதம் அடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கையை ஏற்று சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நெல்லை தொகுதி செயலாளர் பயாஸ் இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.