கல்லார் மீனவ கிராமத்தில் நடிகர் விஜயகாந்தின்

முதலாம் ஆண்டு குருபூஜை

Update: 2024-12-28 08:00 GMT
தமிழக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தில், மீனவர்கள் நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜையை அனுசரித்தனர். கல்லார் மீனவ கிராமத்தில், விஜயகாந்தின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, அனைவரும் அவரது படத்திற்கு பொட்டு வைத்து மலர் தூவி திபாராதனை காண்பித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், விஜயகாந்த் வழியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். நடிகர் விஜயகாந்தின் குருபூஜை முன்னிட்டு, அனைத்து மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News