காரமடை: திடீர் தீ விபத்தில் கார் எரிந்து நாசம் !

ஊட்டியை சேர்ந்த ஷியாம் கோவை நோக்கி வரும்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்.

Update: 2024-12-28 08:08 GMT
ஊட்டியைச் சேர்ந்த ஷியாம் (வயது 42) நேற்று காலை தனது காரில் ஊட்டியில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காரமடை மெயின் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்து கொண்ட ஷியாம் உடனே காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே அவர் பொதுமக்கள் உதவியுடன் குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News