போச்சம்பள்ளி அருகே தேமுதிக நிறுவனருக்கு நினைவு அஞ்சலி
போச்சம்பள்ளி அருகே தேமுதிக நிறுவனருக்கு நினைவு அஞ்சலி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைந்து ஓர் ஆண்டு ஆகிய நிலையில் இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் அவரது திருவுருவ படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர். இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.