முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்கிற்கு
காங்கிரஸ்- கூட்டணி கட்சி சார்பில் மௌன அஞ்சலி பேரணி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவிற்கு, நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மௌன அஞ்சலி பேரணி நேற்று நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமிர்தராஜா தலைமையில் தொடங்கிய மௌன அஞ்சலி பேரணி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரிதிடலில் நிறைவு பெற்றது. பேரணியில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவுரித்திடலில் நடைபெற்ற மௌன அஞ்சலி நிகழ்ச்சியில், காங்கிரஸ், திமுக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மன்மோகன் சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தினர்.