சேலம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் சங்கம் சார்பில் நூலகம்
மாவட்ட நீதிபதி சுமதி திறந்து வைத்தார்
சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்க பொன்விழா ஆண்டையொட்டி சங்க அலுவலகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி, சட்டக்கல்லூரி தாளாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புதிய நூலகத்திற்கு மூத்த வக்கீல் கே.எம்.ஜெயபால் புத்தகங்கள் வழங்கினார். தொடர்ந்து குற்றவியல் வக்கீல்கள் சங்கம் அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.