குமரி மாவட்டம் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் செந்தமிழ் பாண்டியன் (58). முன்னாள் ராணுவ வீரர். இவர் குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் வெள்ளி யா விளை ளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு பைக் இவரது பைக்கில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சேவியர் செந்தமிழ் பாண்டியனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இது போன்று மோதிய பைக்கில் வந்த குடும்பத்தினருக்கும் காயமும் ஏற்பட்டது. இதனை அடுத்து சேவியர் செந்தமிழ் பாண்டியனை நாகர்கோவில் உள்ள மருத்துவமனையிலும், மற்றவர்களை கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இதில் சேவியர் செந்தமிழ் பாண்டியன் சிகிச்சை பலனின்றி நேற்று (10-ம் தேதி)மாலை உயிரிழந்தார். கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.