இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கல்லுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மோட்டார் போடுவதற்காக சென்றபோது திடீரென நிலை தடுமாறி தண்ணீர் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பெண்ணை உயிருடன் மீட்டனர்.