பொங்கல் திருவிழா

இன்று ஈரோடு சட்டக்கல்லூரி பொங்கல் திருவிழாவில் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கொண்டாடினர்

Update: 2025-01-13 09:10 GMT
இன்று ஈரோடு சட்டக்கல்லூரி பொங்கல் திருவிழாவில் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தனர். துணைத் தலைவர் காயத்திரி ரவிச்சந்திரன், இணைச் செயலர் அருண் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் கொண்டாட்டத்தில் சினிமா நடிகர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கஜேந்திரராஜ் வரவேற்றார். இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் சாதி மத வேறுபாடின்றி கூட்டாக பொங்கலிட்டு உலகிற்கு உணவளிக்க சூரிய கடவுள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாரம்பரியத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் மாணவர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. சிலம்பம், பரதம்,நடனம், கயிறு இழுத்தல்,உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணைத் தலைவர் காயத்திரி ரவிச்சந்திரன், இணைச் செயலர் அருண் பாலாஜி ஆகியோர் வழங்கினார், இந்த விழா மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் கலாச்சார நல்லிணக்க உணர்வுடன் ஒன்றிணைந்து கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு மாணவர் கொண்;டாடினர், அதே போல கொளப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சிந்து செவிலியர் கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டது, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கலிட்டும் வளாகம் முழுவதும் கோலமிட்டனர்,மேலும் பாரம்பரிய விளையாட்டுளான உறியடித்தல் கும்மியடித்தல்,மாட்டு வண்டி ஊர்வலம், உள்ளிட்ட நிகழ்சியில் மாணவிகள் கலந்து கொண்டனர், தொடர்ந்து பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கான பேச்சு போட்டி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, செயலர் மீனாட்சி ரவிசந்திரன், கல்லூரி துணை தலைவர் கிசோர், மற்றும் ஈரோடு சட்டக்கல்லூரி துணைத் தலைவர் காயத்திரி ரவிச்சந்திரன், இணைச் செயலர் அருண் பாலாஜி, துணை செயலர் சாருரூபா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார்,

Similar News