சமத்துவ பொங்கல் கொண்டாடிய திமுகவினர்
தர்மபுரி எம்பி முன்னிலையில் திமுக கட்சி அலுவலகம் மற்றும் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா
இன்று (13.01.2025) தர்மபுரி திமுக மாவட்ட அலுவலகம் மற்றும் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய, நகர ,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் , சார்பு அணிகளின் நிர்வாகிகள் , என பலர் திரளாக கலந்து கொண்டனர்