கோவை: புதிய பேருந்துகளில் தொழில்நுட்ப கோளாறு- பயணிகள் அவதி !
பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, தானியங்கி கதவு பூட்டப்பட்டு பின்பக்க கதவு திறக்காத நிலை ஏற்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்து துறையின் புதிய முயற்சியாக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் பயணிகளை அவதிக்குள்ளாக்கி வருகின்றன. கோவை சிவானந்தா காலனிக்கு இயங்கும் 5 என்ற எண்ணிலான நகர சொகுசு பேருந்து, நேற்று பெரியநாயக்கன்பாளையம் வரை 124C என்ற எண் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டது. பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, தானியங்கி கதவு பூட்டப்பட்டு பின்பக்க கதவு திறக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பேருந்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்தனர். புதிய பேருந்துகளில் தொடர்ந்து ஏற்படும் இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள், பயணிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி வருகின்றன. அரசு போக்குவரத்து துறை, பேருந்துகளை முறையாக பராமரித்து, பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. புதிய பேருந்துகளில் தொழில்நுட்பக் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.