புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மரவம்பட்டி கடைவீதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கறம்பக்குடி, கணக்கன்காடு வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரொக்க பணம் ரூபாய் 4,400, ஆண்ட்ராய்டு போன் ஒன்று, இருசக்கர வாகன ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கருப்பையா என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.