இராசிபுரம் எஸ் ஆர் வி இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி..

இராசிபுரம் எஸ் ஆர் வி இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி..;

Update: 2025-01-27 15:10 GMT
இராசிபுரம் எஸ் ஆர் வி இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளியில்  மாவட்ட அளவிலான செஸ் போட்டி..
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் எஸ் ஆர் வி இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராயல் கிங்ஸ் செஸ் அகாடமியின் சார்பாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியினைச் சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் தலைவர் A.இராமசாமி பள்ளியின் துணைத்தலைவர் M.குமரவேல், பள்ளியின் பொருளாளர் P.சுவாமிநாதன், பள்ளியின் செயலர் S.செல்வராஜன், பள்ளியின் இணைச் செயலாளர் B.சத்தியமூர்த்தி பள்ளியின் நிர்வாக அறங்காவலர் A.R.துரைசாமி அவர்கள்,பள்ளியின் முதல்வர்கள் திருமதி D.ஆர்த்தி, திருமதி S.சுனித்தா(Secondary)அவர்களும் மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் செஸ் பயிற்சியாளர் மற்றும் தேசிய அளவிலான நடுவர்(Senior National Arbiter) S. கார்த்திகேயன், வரவேற்புரை ஆற்றினார். தேசிய அளவிலான நடுவர்(Senior National Arbiter) V. ஆதயம் நடுவர் உரையாற்றினார். செயலர்(NDCF) S. ஞானசேகரன், சிறப்புரையாற்றினார். இறுதியாக போட்டிகள் நிறைவடைந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. செஸ் பயிற்சியாளர்(Royal King Chess Academy) S.தினேஷ்குமார்(SNA) நன்றியுரை வழங்கினர்.

Similar News