சோளிங்கர்: மகளிர் குழுக்களுக்கு கலாசார போட்டி
மகளிர் குழுக்களுக்கு கலாசார போட்டி;
![சோளிங்கர்: மகளிர் குழுக்களுக்கு கலாசார போட்டி சோளிங்கர்: மகளிர் குழுக்களுக்கு கலாசார போட்டி](https://king24x7.com/h-upload/2025/01/30/787661-1000195499_1738212985826_1738319386626_1738382665587_1739178767993_1739305675189_1739742052025.webp)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சோளிங்கர் ஒன்றிய அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோலம், கபடி, கால்பந்து, கோக்கோ உள்ளிட்ட கலாசார போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக, வட்டார வாழ்வாதார இயக்க மேலாளர் டில்லி ராணி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பன்முக கலாசார போட்டிகளை தொடங்கிவைத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒன்றியக்குழு தலைவர் காசோலை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், கொண்டாடி சுதாபாபு அந்தோணி, விஜயகாந்த், ஆனந் தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் வர்மன் மற்றும் ஒன்றிய பணியாளர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.