சோளிங்கர்:கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை நகராட்சி தலைவர் ஆய்வு!
கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை நகராட்சி தலைவர் ஆய்வு;

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென்வன்னியர் தெருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருந்தது. இந்தநிலையில் சேதமடைந்த கழிவுநீர் கால் வாயை சீரமைத்து, சிறு பாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஆணையாளர் ஹேமலதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டுமான பொருட்கள் தரமாகவும், குறித்த நேரத்தில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். கவுன்சிலர்கள் அசோகன், சண்முகம், பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், மனோஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.