காவேரிப்பாக்கம் : இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்;

Update: 2025-01-30 05:02 GMT
காவேரிப்பாக்கம் : இலவச கண் சிகிச்சை முகாம்
  • whatsapp icon
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் பெருவளையம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் சி.எஸ்.கே.குமரேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் தனியார் கண் மருத்துவமனை டாக்டர்கள் லாவண்யா, சாந்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடுகள், கண்புரை நோய் உள்ளிட்ட கண் சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News