ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு;

ராணிப்பேட்டை: புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகிய செயல்களுக்கான தேதி 31.12.24 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் 31.3.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு மேற்குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தகவலை ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.