
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள ஓசூர் பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் எஸ். மனுஸ் ரேயா, மாநில அளவில் நடைபெற்ற ஆங்கில கட்டுரை போட்டியில் 3-ம் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி மாணவிக்கு 25,000 ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மனுஸ் ரேயாவை பாராட்டினர்.