குமரி : இந்து முன்னணி நிர்வாகிகள் கைது - வீட்டுக்காவல்

தக்கலை;

Update: 2025-02-04 11:29 GMT
குமரி : இந்து முன்னணி நிர்வாகிகள் கைது - வீட்டுக்காவல்
  • whatsapp icon
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் ஏற்கனவே இருதரப்பு மோதல் காரணமாக அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதனால் நேற்று இரவோடு இரவாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் தக்கலை பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி சேர்ந்த 10 நிர்வாகிகள் வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், வேல் குமார் மற்றும் மாவட்ட துணை தலைவர் உள்ளிட்டோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து மற்றும் 10 பேரை வீட்டுக்காவல் போடப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News