புளியங்குடி ஸ்ரீ தர்ம சாஸ்தா 26ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது
ஸ்ரீ தர்ம சாஸ்தா 26ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் புளியங்குடி ஸ்ரீ தர்ம சாஸ்தா 26ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு சிந்தாமணி அகில பாரத ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் நடத்தும் அன்னதான விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.