சேலம் அருகே வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

போலீசார் நடவடிக்கை

Update: 2024-12-28 08:24 GMT
சேலம் மாவட்டம், காகாபாளையம் அடுத்த சேனைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கோவிந்தராஜ் (வயது 22), வக்கீல். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அன்று அவர் காகாபாளையத்தில் அலுவலக வேலையை முடித்து விட்டு இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் சாலை ஓரம் நின்று போன் பேசி கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), பார்த்திபன் (20), வினோத்குமார் (24) ஆகியோர் வக்கீல் கோவிந்தராஜிடம் வாய் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீலை தாக்கியதாக அருண்குமார், பார்த்திபன், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News