செல்லாண்டிபட்டியில் 4-வது பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

செல்லாண்டிபட்டியில் 4-வது பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-08-21 07:47 GMT
செல்லாண்டிபட்டியில் 4-வது பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சியில் உள்ள செல்லாண்டிபட்டியில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான்காவது பகுதிநேர நியாய விலை கடையை இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. பொதுவாக நிலையான நியாய விலை கடையில் அதிகப்படியான குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால், அதிகபட்சமாக மூன்று பகுதி நேர கடைகள் மட்டுமே திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் செல்லாண்டிபட்டி பகுதியில் அதிகப்படியான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதால், நான்காவது பகுதி நேர நியாய விலை கடை திறக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அரசுக்கு கோரிக்கையை அனுப்பி, கருத்துரு பெற்று, இன்று புதிய பகுதிநேர கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி, தாந்தோணி ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Similar News