புதிய கிராம செயல் அலுவலகம் திறப்பு
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கிராம செயல் அலுவலகம் திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவணி பேரூர் கீழ் முகம் ஊராட்சியில் 39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிராம செயலக கட்டிடத்தை காணொளி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவணி பேரூர் கீழ் முகத்தில் 39.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிராம செயலக அலுவலகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூமி பூஜையுடன் தொடங்கியது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிராம செயல் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள்மணி சிறப்பு பூஜை செய்து புதிய கிராம செயலக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்டிட ஒப்பந்ததாரர் பாலு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் இருந்தனர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.