முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!!
By : King 24x7 Desk
Update: 2025-01-28 08:49 GMT

supreme court
முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “130 ஆண்டுகளுக்கு மேல் ஆன அணை எத்தனையோ பருவ மழையை கண்டு இன்னும் நிலையாக உள்ளது. அணை உடைந்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர். மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுவது காமிக் கதைகள் போல் இருக்கிறது. நானும் கேரளாவில் வசித்துள்ளேன் என்ற நீதிபதி நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.