ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’

Update: 2024-05-03 06:28 GMT

Modi

ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் மற்றொரு அணியாகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி இல்லாமல் 3வது முறையாக தேர்தல் களம் காணும் முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தொகுதிகளிலும் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News