உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
By : King24x7 Rafi
Update: 2024-05-08 06:41 GMT
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வணிக காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன.