4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,710 பேரில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு: 476 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேரிடம் சொத்து இல்லை
By : King24x7 Rafi
Update: 2024-05-12 05:11 GMT
4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாகவும், 24 பேரிடம் சொத்து ஏதும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக 102 மக்களவை தொகுதிக்கும், இரண்டாவது கட்டமாக 89 தொகுதிக்கும், மூன்றாவது கட்டமாக 93 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளை மறுநாள் (மே 13) நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 1,710 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 360 வேட்பாளர்கள் மீது அதாவது 21 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.