ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் 2 பேர் கைது: ரேவண்ணா, பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் புகார்

Update: 2024-05-13 06:20 GMT

Dev

கர்நாடகாவில் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் பாஜகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் லிக்கித் கவுடா, எலகுண்ட சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Similar News