வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி

Update: 2024-05-17 04:54 GMT

Election results 

வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ெமாத்தம் 49 பதவிக்கு 695 பேர் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனால் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நான்கு கட்டங்களையும் சேர்த்து 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம், 65.68 சதவீதம், 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Similar News